‘ஊ‘ – வரிசையில் பழமொழிகள்

1.    ஊசி போகுற கணக்குப் பார்ப்பான்; பூசனி போகுற கணக்கு தெரியாது.
2.    ஊசிபோல் மிடறும் பானைபோல் வயிறும்
3.    ஊசியை காந்தம் இழுக்கும், உத்தமனை சிநேகம் இழுக்கும்
4.    ஊடல் காமத்துக்கு இன்பம்
5.    ஊண் அற்ற போதே உறவற்றுப் போகும்
6.    ஊணுக்கு முந்து கோளுக்குப் பிந்து
7.    ஊத்தைக்கு விளாங்காய் சேர்த்தது போல்
8.    ஊதாரிக்குப் பொன் துரும்பு
9.    ஊதாரியிடம் கிடைக்காது கைமாற்று
10.    ஊமை கண்ட கனா
11.    ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்
12.    ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
13.    ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?
14.    ஊர் வாயை மூட உலைமூடி இல்லை
15.    ஊர்க்குருவி மேலே ராம பாணம் தொடுக்கலாமா?
16.    ஊரறிந்த பார்ப்பனுக்கு பூணூல் எதற்கு?
17.    ஊரார் நாய்க்குச் சோறிட்டாலும் அது உடையவன் வீட்டில்தானே குரைக்கும்?
18.    ஊரார் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே.
19.    ஊராருக்கெல்லாம் ஒரு வழி, இவனுக்கு ஒரு வழி.
20.    ஊருக்காக இரும்பு அடிக்கிறவன் வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லையாம்.
21.    ஊருக்கு ஊர் மாறும் பழக்கம்
22.    ஊருக்கெல்லாம் சாஸ்திரம் சொல்லும் பல்லி கூழிலே விழுந்ததாம்
23.    ஊருக்கென்று ஒரு தாசி இருந்தால் யாருக்கென்று அவள் ஆடுவாள்?
24.    ஊருடன் பகைத்தல் வேருடன் கெடும்
25.    ஊருடையவன் பெண்டிரைப் பிடித்தால் யாரிடம் சொல்லி முறையிடுவதாம்?
26.    ஊரோச்சம் வீடு பட்டினி
27.    ஊன் அற்றபோது உடலற்றது
28.    ஊனுக்கு முந்துவான்; வேலைக்கு பிந்துவான்.
29.    ஊன்றக்கொடுத்த தடி என் உச்சியை உடைக்கிறது

Leave a Reply